“குஷியோ குஷி” தமிழகம் முழுவதும் உயர்வு….. அரசாணை வெளியீடு…!!!

தமிழக முதலமைச்சர் 75-வது சுதந்திர தின உரையில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு  அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் அரசு ஊ ஊழியர்களின் அகவிலைப்படி 31% லிருந்து 34% ஆக அடிப்படை ஊதியத்தில் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நிலுவையில் உள்ள அகவிலைப்படி ஜூலை 1ஆம் தேதி வரை ரொக்கமாகவும், அதைத்தொடர்ந்து உள்ள நாட்களுக்கு பணமில்லா பரிவர்த்தனை மூலமும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *