தமிழகத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்றும் கனமழை வெளுத்து வாங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்து அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.

அதன்படி திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு விழுப்புரம், தேனி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.