மேற்குவங்க மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோழிக்கறி வழங்கப்படும் என அண்மையில் அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மேற்குவங்க மாநிலத்தைப் போல தமிழகத்திலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை கோழிக்கறி வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து அமைச்சர்கள் சிலர் பிராய்லர் கோழி பண்ணை உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி இந்த திட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் அக்கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் கூறியுள்ளனர். இருந்தாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.