குவைத்தில் தொழிலாளர் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களுடைய எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது குறிப்பிட த்தக்கது.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், குவைத் நாட்டில் தொழிலாளர்கள் தங்கி இருந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாடு, கேரளம் பிற மாநிலங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் என்று கூறியிருக்கிறார்.