குவஹாத்தியில் உருவாக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தும் மையம்… அசாம் மாநிலம் அதிரடி

அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள இந்திரா காந்தி தடகள மைதானத்தில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தும் மையத்தை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது. இந்த பணிகளை அசாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று பார்வையிட்டார். உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே இருந்து வருகிறது. இந்தியாவில் மட்டும் நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 649 ஆக உள்ளது. பலி எண்ணிக்கையும் 13ஆக அதிகரித்துள்ளது. தோற்று நோய் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், கேரள மாநிலம் 2வது இடத்திலும் உள்ளது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் 144 தடை உத்தரவை பிரதமர் மோடி அமல்படுத்தி அறிவித்தார். அதன்படி, இன்று 2வது நாளாக சுய ஊரடங்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் மையத்தை அசாம் மாநிலம் உருவாக்கி வருகிறது. குவஹாத்தியில் உள்ள இந்திரா காந்தி தடகள மைதானத்தில் இந்த மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டமைப்பு பணிகளை அம்மாநில அமைச்சர் உடன் இருந்து கண்காணித்து வருகிறார். அசாம் மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *