திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சாந்த கவுண்டனூர் புதூர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமுதவள்ளி(26) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் குமுதவள்ளிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. இந்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட குமுதவள்ளியை குடும்பத்தினர் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஒரு வாரம் குமுதவள்ளி சிகிச்சை பெற்றுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
நேற்று இரவு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமுதவள்ளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே செங்கம் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.