குழந்தை திருமணம்… தகவல் தெரிவித்தால் ரூ.2,500 பரிசு…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்று வருகிறார்கள். சில கிராமப்புறங்களில் ஆன்லைன் வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் வகுப்புகளை கற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அதனால் சிலர் தங்கள் பிள்ளைகளை வேலைகளுக்கு அனுப்புகின்றனர். அதுமட்டுமல்லாமல் குழந்தை திருமணம் அதிக அளவில் நடை பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குழந்தை திருமணம் நடக்க இருப்பதை பற்றி அரசுக்கு முன்கூட்டியே தகவல் தருபவருக்கு ரூ.2,500 சன்மானம் தரப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. தகவல் தெரிவிக்க உதவும் வகையில் அங்கன்வாடிகளில் இ-மெயில் முகவரி, தொலைபேசி எண்கள் வைக்கப்படும். தகவல் கொடுப்பவரின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் சன்மானத்தை அவர் நேரில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *