குழந்தையை தேடி அலைந்த தாய்…. வீட்டில் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

2 வயது குழந்தை தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் மற்றும் ஆண் என இரட்டை குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் அஜிதா சமையல் செய்து கொண்டிருந்த போது ஆண் குழந்தையான ஜெயதேவ் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது திடீரென காணாமல் போன குழந்தையை அஜிதா பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளார்.

இதனை அடுத்து வீட்டின் குளியலறையில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் மூழ்கிய நிலையில் குழந்தை அசைவற்று கிடப்பதை பார்த்து அஜிதா அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *