“குழந்தையை கடத்தி சென்றுவிட்டார்” மனைவி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

குழந்தையை தந்தை கடத்தி சென்றதாக தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடியில் பிரியா(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ரவி என்பவருடன் பிரியாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் வீட்டில் இருந்த குழந்தையை ரவி தூக்கி சென்றுள்ளார். இந்நிலையில் குழந்தையை ரவி கடத்தி சென்றதாக பிரியா பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.