சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிபிசிஐடி போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் பலரை அதிரடியாக அடுத்தடுத்து கைது செய்து வருகிறார்கள். இவருடைய வீடு சென்னை பெரம்பூரில் அமைந்துள்ள நிலையில் மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து ஒரு கடிதம் வந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அந்த கடிதத்தில் குழந்தையை கடத்தி விடுவதுடன் மொத்த குடும்பத்தையும் கொலை செய்து விடுவேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பெரம்பூரில் உள்ள அவருடைய வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆம்ஸ்ட்சாங் மறைந்த பிறகு அவருடைய மனைவி பொற்கொடிக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்ட நிலையில் அவருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.