“குழந்தையுடன் மழையில் ஆட்டம் போட்ட ஸ்ரேயா”…. இணையத்தில் வீடியோ வைரல்…!!!!!

குழந்தையுடன் மழையில் ஆட்டம் போட்ட ஸ்ரேயாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தார் ஸ்ரேயா சரண். இவர் சென்ற 2018 ஆம் வருடம் ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரேய் காஸ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல மாதங்களுக்கு முன்பாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஸ்ரேயா அவ்வப்போது குடும்பத்துடன் உள்ள போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றார்.

ஸ்ரேயா சரண்

இந்த நிலையில் ஸ்ரேயா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மகளுடன் மழையில் நனைந்தபடி ஆட்டம் போட்டதை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வெளியே புயலின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது என்றால் போனுக்குள் இவரின் தாக்கமும் வேற லெவல்ல நல்லா இருக்கு என உருகி வருகின்றார்கள். இவர் குழந்தையோடு ஆட்டம் போட்டது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.