குழந்தையுடன் கடமைகளைச் செய்த மேயர்… குவியும் பாராட்டுகள்….!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் 21 வயதில் மேயராகி சாதனை படைத்த ஆர்யா ராஜேந்திரன் மீண்டும் செய்திகளில் இடம் பிடித்துள்ளார். அதாவது ஒரு மாதத்திற்கு முன்பு இவர் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் தனது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு தன்னுடைய பணிகளை செய்து வருகின்றார். அவர் கையில் குழந்தையுடன் கோப்புகளில் கையெழுத்திடும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது சேவையும் முக்கியம் என்பதால் குழந்தையுடன் அலுவலகத்திற்குச் சென்று மக்களிடம் மனுக்களை பெற்று அங்கிருந்த கோப்புகளில் கையெழுத்திட்டார். இதற்கு சிலர் பெண்களின் தொழிலுக்கு தாய்மை தடை இல்லை என்று கருத்து தெரிவித்து அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply