குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம்…. எடுக்க முடியாமல் திணறிய பெற்றோர்…. பின் நடந்த சம்பவம்….!!!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் கிளாக்குளத்தில் வசித்து வரும் பழனிச்சாமி-வனிதா தம்பதியினருக்கு 1 1/2 வயதில் அஜித் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் அஜித் சமையல் அறையில் உள்ள பாத்திரத்தை எடுத்து தலையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் பாத்திரம் அஜித்தின் தலையில் சிக்கிக்கொண்டது. இதனால் வலி தாங்க முடியாமல் அஜித் நீண்டநேரம் கூச்சலிட்டான்.

இதையடுத்து பெற்றோர்கள் குழந்தையின் தலையில் இருந்த பாத்திரத்தை மீட்க பலமணி நேரம் போராடினர். அதன்பின் பாத்திரத்தை எடுக்க முடியாததால் பரமக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்த தீயணைப்புபடை வீரர்கள் 1 மணி நேரமாக போராடி குழந்தையின் தலையில் இருந்த பாத்திரத்தை வெட்டி காயமின்றி பத்திரமாக அகற்றினர். இவ்வாறு துரிதமாக செயல்பட்டு குழந்தையின் தலையில் சிக்கி இருந்த சில்வர் பாத்திரத்தை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினரை அப்பகுதி பொதுமக்களும், குழந்தையின் பெற்றோரும் வெகுவாக பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *