சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் அடுத்த இராமநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவருக்கு பிரியங்கா (35) என்ற மனைவி உள்ளார். மணிகண்டன் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். மணிகண்டன்- பிரியா தம்பதியினருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம்போல மணிகண்டனுக்கும், பிரியங்காவுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளான பிரியங்கா தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தான் உடலில் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த பிரியங்காவை அருகில் இருந்தவர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துள்ளார். கணவன், மனைவி சண்டையில் மனைவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.