குழந்தைகளுக்கு பிடித்த… கலக்கலான “VARIETY Rice”…!!

ஒரு தக்காளி, ஒரு  வெங்காயம் இருந்தால் போதும் மூன்று பேரும் சாப்பிடும்படி ஒரு சூப்பரான வெரைட்டி ரைஸ் செய்யலாம்..!!

தேவையான பொருள்:

வெங்காயம்                      –  2
தக்காளி                              – 2
கேரட்                                    –  1
எண்ணெய்                        – 4 ஸ்பூன்
கடலைப்பருப்பு              – இரண்டு ஸ்பூன்
உளுந்தம் பருப்பு           –  ஒரு ஸ்பூன்
கடுகு                                    – அரை ஸ்பூன்
பச்சை மிளகாய்            –  2
கறிவேப்பிலை                –  சிறிதளவு
கொத்தமல்லித் தழை  –  சிறிதளவு
உப்பு                                      – தேவையான அளவு
வத்தல் பொடி                   –  ஒரு ஸ்பூன்
மல்லித் தூள்                       –  ஒரு ஸ்பூன்
சீரகத்தூள்                           –  கால்ஸ்பூன்
மஞ்சள் தூள்                       –  கால் ஸ்பூன்
சாதம்                                     –  ஒரு கப்

செய்முறை:

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடானதும், 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணையை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள், எண்ணெய் சூடானதும் கடலை பருப்பு  கடலை பருப்பு சேர்த்துக் கொள்ளுங்கள், அதே அளவிற்கு உளுந்தம் பருப்பு, கடுகு அரை ஸ்பூன் இவை மூன்றையும் எண்ணெயில் போட்டு நன்றாக கிளறி சிவந்து வரும் அளவிற்கு வறுத்துக்கொள்ளுங்கள்.

அவ்வாறு சிவந்து வரும் பொழுது நறுக்கிய ஒரு பச்சை மிளகாய் சேர்க்கவும், பொடியாக நறுக்கிய கேரட், அதன் பிறகு பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம் சேர்க்கவும், அதோடு சிறிது கறிவேப்பிலையும் சேர்த்து கிளறி விடுங்கள். வெங்காயம் நன்றாக வதங்கி வரும்போது, பொடியாக நறுக்கிய ஒரு தக்காளியை சேர்த்துக் கொள்ளுங்கள். அதோடு அரை ஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக தக்காளி மசியும் அளவிற்கு  வதக்கிக் கொள்ளுங்கள்.

இப்பொழுது இதோடு மிளகாய் தூள் அரை ஸ்பூன்,  மல்லித் தூள் அரை ஸ்பூன், சீரகம் தூள் கால் ஸ்பூன், மஞ்சள்தூள் கால்ஸ்பூன், தேவையான அளவு உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். இதோடு உதிரியாக வேகவைத்து வைத்திருக்கும் சாதத்தை போட்டு நன்றாக கிளறி விடுங்கள். சூப்பரான வெரைட்டி ரைஸ் ரெடி..!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *