குழந்தைகளுக்கு…” இந்த மருந்துகளை எல்லாம் கொடுக்காதீங்க”… ஆபத்து அதிகம்..!!

2 வயது கீழே உள்ள குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய எந்த மருந்துகளையும் கொடுக்க வேண்டாம் என்று ஆய்வு தெரிவித்துள்ளது.

பிறந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருக்கும். தாய்மார்களின் தாய்ப்பாலே குழந்தைக்கு மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தியாகும். தாய்ப்பாலை விட மிகச்சிறந்த உணவு குழந்தைகளுக்கு எதுவும் கிடையாது. இதில் ஒரு சில தாய்மார்கள் குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் வரும்பொழுது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கின்றது என்று எண்ணி ஆண்டிபயாடிக் என்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய மருந்துகளை கொடுக்கின்றனர்.

இரண்டு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் என்று கூறக்கூடிய ஆண்டிபயாடிக் கொடுக்கக் கூடாது என மயோ கிளினிக் சிப்ரோசிடிங்ஸ் ஆய்வு தெரிவித்துள்ளது. மீறிக் கொடுத்தால் உடல் பருமன், ஒவ்வாமை உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.  பச்சிளம் குழந்தைகளுக்கு ஆன்டிபயாடிக்ஸ் கொடுப்பதன் மூலம் நீண்ட கால சுகாதார சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு உணவு,  தாய்ப்பால் தவிர எந்த வித ஆன்டிபயாடிக் மருந்துகளை கொடுக்க வேண்டாம் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *