சென்னையில் உள்ள ஒரு பிரபலமான இன்ஜினியரிங் கல்லூரியில் 20 வயது மாணவி ஒருவர் BE 4 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் திருமங்கலம் காவல் நிலையத்தில் தற்போது பரபரப்பு புகார் ஒன்றிணை கொடுத்துள்ளார். அதில் நான் திருமங்கலத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறேன். அப்போது எதிர் வீட்டில் குடியிருக்கும் 26 வயது இளம் பெண்ணுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. அவர் அவசர தேவைக்காக என்னிடம் பணம் கேட்டார். இதனால் நான் ரூ.1,00,000 ரொக்கம் மற்றும் ஒரு பவுன் தங்க நகையை அவரிடம் கொடுத்தேன்.

அந்தப் பெண்ணுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்த நிலையில் அவருடன் பழகியதால் எனக்கும் அந்த பழக்கம் ஏற்பட்டது. ஒரு நாள் நாங்கள் இருவரும் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தோம். அப்போது அந்தப் பெண் எனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார். அவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுமாறு என்னை வற்புறுத்தினார். இதற்கு நான் மறுத்து அந்த பெண்ணுடன் பேசுவதை நிறுத்தி விட்டேன். இதனால் அந்த பெண் நான் குளிப்பதை வீடியோ எடுத்து என்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடாவிட்டால் வீடியோவை வெளியே விட்டு விடுவேன் என்று மிரட்டினார்.

இதனால் நான் வீட்டை காலி செய்ய முயற்சித்தேன். ஆனால் அந்த பெண் என்னை தொடர்ந்து மிரட்டுகிறார். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இளம்பெண்ணின் மீதான குற்றம் உண்மை என தெரியவந்தது. இதனால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது அந்தப் பெண் தனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. என்னை ஒரு மனநல மருத்துவமனையில் சேருங்கள் என்று கதறி அழுதார். இதைக் கேட்டவுடன் நீதிபதி அந்த பெண்ணை மனநல மருத்துவமனையில் சேர்க்குமாறு கூறினார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.