குளிக்க சென்ற வாலிபர் … குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

குளிக்கச் சென்ற நபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிமடம் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள கண்மாயிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் கண்மாயில் குளித்துக் கொண்டிருக்கும்போது பாலசுப்பிரமணியன் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்து உள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் பாலசுப்பிரமணியனை  மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர்  பாலசுப்பிரமணியனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *