குளிக்க சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

குளிக்க சென்ற வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள நக்கசேலம் கிராமத்தில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் அதே பகுதியில் வசிக்கும் ஜவகர்(31) என்பவர் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் ஜவகர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது ஜவகர் கிணற்றில் சடலமாக கிடந்ததை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஜவகரின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *