குளத்தில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குளிக்க சென்ற வாலிபர் குளத்தில் சடலமாக மிதந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆயங்குடியில் இருக்கும் பிள்ளையார் கோவில் குளத்தில் வாலிபரின் சடலம் மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்(20) என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட சந்தோஷ் குளிக்கச் சென்றபோது நிலைதடுமாறி விழுந்து இறந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *