குலதெய்வ கோவிலுக்கு சென்ற குடும்பம்…. பெண்ணிற்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய  விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வலசை பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு மதுமிதா என்ற மகளும், அனீஸ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று பழனி தனது குலதெய்வ கோவிலுக்கு  மனைவி மற்றும் குழந்தைகளுடன்   மோட்டார் சைக்கிளில் காப்புக்காடு சாலையில்  சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து பழனியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த திவ்யாவை அருகில் இருந்தவர்கள் மீது சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அழிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி திவ்யா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *