குறைந்து வரும் பாதிப்பு…. முழுஊரடங்கை தளர்த்த…. மகாராஷ்டிரா அரசு திட்டம்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பகுதிநேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கை பிறப்பித்து வருகின்றது. இதனால் ஒருசில மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

அந்தவகையில் மகாராஷ்டிராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கமாக ஏப்ரல் 15 ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அதன்பின்னர் ஊரடங்கை ஜூன் 1 வரை அம்மாநில முதல்வர் நீட்டித்தார். இந்நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கை படிப்படியாக தளர்த்த அம்மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. எனவே ஜூன் 1-ஆம் தேதி முதல் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *