கடந்த 2020 ஆம் வருடம் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது .அந்த குழந்தைக்கு அகஸ்தியா என்று பெயர் சூட்டினார்கள்.  இந்த நிலையில்  இந்த தம்பதிகள் பிரிந்து விட்டதாக சமூக வலைதளத்தில் கருத்து பரவி வந்தது .ஆனால் அவையெல்லாம் வதந்தி என்று பின்னர் தெரிய வந்தது.

இந்த நிலையில் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தன்னுடைய மகன் அகஸ்தியாவோடு விளையாடும் வீடியோவை ஹர்திக் பாண்டியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். என் வாழ்க்கையில் இவ்வளவு அன்பையும் மகிழ்ச்சியும் கொண்டு வந்ததற்கு நன்றி.. முழு மனதோடு உன்னை நேசிக்கிறேன்… எப்போதும் உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்.. என்று பதிவிட்டுள்ளார்.