குறுந்தகவல் மூலம் விற்பனை….. வசமாக சிக்கிய பழக்கடை வியாபாரி…. போலீஸ் அதிரடி…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கன்னிச்சேரி- முதலிப்பட்டி சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பழக்கடை வைத்திருக்கும் சிவசக்தி என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை குறுந்தகவல் மூலம் விற்பனை செய்து வந்துள்ளார். இதனை அறிந்த போலீசார் சிவசக்தியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், செல்போன் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிவசக்திக்கு உடந்தையாக இருந்த மற்றொரு நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.