குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு விளங்குகிறது. வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி ஆகியவை விவசாயத்திற்கு முக்கிய பாசனமாக இருக்கிறது. குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதியில் குறிஞ்சிப்பாடி, வடலூர் ஆகிய 2 பேரூராட்சிகளும், 59 ஊராட்சிகளும் உள்ளன. 1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் 9 முறை திமுகவும்,4 முறை அதிமுகவும் வென்றுள்ளது.

தற்போதைய எம்.எல்.ஏவாக திமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னிர்செல்வம். தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,35,885 ஆகும். இங்கு விவசாயம், நெசவுக்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழில் அதிகமாக உள்ளது. செம்மண் நிறைந்த கேப்பர்மலையில் வாழை, முந்திரி, பன்னீர்கரும்பு ஆகியவை அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன.

கேப்பர்மலை பகுதியில் அதிகளவில் செம்மண் திருடப்பட்டு வருவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு, சாலைகளை மேம்படுத்துதல் போன்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ரசாயன கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதை தடுக்க வேண்டும், வாய்க்கால்களை தூர்வார வேண்டும்,மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோளாக நீடிக்கிறது. மேலும் கைத்தறி நெசவுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும் நெசவாளர்கள் கோரிக்கை விடுகின்றனர். குறிஞ்சிப்பாடி தொகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என பல கோரிக்கைகளுடன் வரும் சட்ட மன்ற தேர்தலை அப்பகுதி மக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *