குரூப்-2, 2A தேர்வு: எந்த கேள்வியும் தவறாக இல்லை…. TNPSC அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று குரூப் 2 குரூப் 2a தேர்வு திட்டமிட்டபடி நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்வு மூலமாக சுமார் 5529 காலிபணியிடங்களுக்கு 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 1.83 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குரூப் 2, குரூப் 2a தேர்வில் எந்த கேள்வியும் தவறானவை அல்ல. குரூப் 2 தேர்வின் கேள்வி மொழிபெயர்ப்பு ஆப்ஷன்களில் எந்த தவறும் கிடையாது.

தேர்வுக்கான தற்காலிக விடை குறிப்பு தேர்வாணைய இணையதளத்தில் ஐந்து நாட்களில் வெளியிடப்படும். விடை குறிப்புகள் மீது தேர்வர்கள் தங்கள் ஆட்சேபணைகளை வழங்க ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படும். வல்லுநர் குழு கூடி ஆட்சேபணைகளை பரிசீலனை செய்து இறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *