தமிழகத்தில் குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முக தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் கடந்த 12ம் தேதி கலந்தாய்வு நடந்து முடிந்தது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியலை https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியானது. அதன்படி குரூப் 1 பதவிகளில் காலியாக இருந்த இடங்களில் 94 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.