குரங்கு காய்ச்சல்: மேற்கத்திய நாடுகளை குறிவைக்கு…. WHO வெளியிட்ட தகவல்….!!!!

உலகநாடுகளில் கொரோனா தொற்று தாக்கம் இருக்கும் சூழ்நிலையில், மேற்கத்திய நாடுகளில் புதிதாக மங்கி பாக்ஸ் என அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் பரவல் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக உலகசுகாதார அமைப்பு(WHO) ஆலோசனை மேற்கொள்கிறது. இதனையொட்டி WHO செய்தி தொடர்பாளர் கூறியதாவது, “37 நபர்களுக்கு குரங்கு காய்ச்சலானது உறுதியாகி இருக்கிறது. இதற்கிடையில் 71 பேருக்கு இந்த நோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது” என்று தெரிவித்தார். இதையடுத்து WHO-ன் பிராந்திய இயக்குனர் குளூஜ் கூறியதாவது, “இதுவரை பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவீடன், இங்கிலாந்து போன்ற 8 நாடுகளில் அண்மைகாலத்தில் குரங்கு காய்ச்சல் பரவி இருக்கிறது.

இந்த நாடுகளைத் தவிர ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்காவில் உள்ளூர் தொற்றாக குரங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது” என்று கூறினார். ஆப்பிரிக்கநாடான காங்கோவில் இந்த வருடத்தில் இதுவரை 1,284 நபர்களுக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் மேலும் 11 நபர்களுக்கு இந்த காய்ச்சல் பாதிப்பானது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கு இதன் பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கையானது 20 ஆக அதிகரித்துள்ளது. குரங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை இன்றி சில வாரங்களில் நோயில் இருந்து மீண்டுவிடலாம் என்றாலும், வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு உடையவர்கள் ஆகியோருக்கு இந்நோய் தாக்குதல் தீவிரமாகலாம்.

அத்துடன் காய்ச்சல், கணுக்களில் ஏற்படும் வீக்கம், கொப்புளங்கள் ஆகியவை இந்த குரங்கு காய்ச்சலின் அறிகுறியாக இருக்கும் என WHO கூறுகிறது. இதற்கிடையில் எளிதாக இந்த நோய் பரவிவிடாது என்று கூறினாலும், நெருங்கிய உடல் தொடர்புகள், பாலுறவு ஆகியவற்றினால் பரவும். இந்த வைரஸ் மனிதர்களுக்கு கண்கள், மூக்கு, வாய், உடல் திரவங்கள், சுவாச நீர்த்துளிகள் மூலமாக பரவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சுவீடனில் இந்த தொற்று பாதிப்பு முதல் முறையாக கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு இந்நோய் ஆபத்தான நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அங்கு தொற்று பரவலை தடுப்பதற்கு கட்டுப்பாடு நடவடிக்கைகளை முடுக்கி விடுவதற்கு வழிவகுக்கும் என அந்நாட்டின் சுகாதார மந்திரி லேனா ஹாலன்கிரென் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *