“குரங்குகளுக்கு உணவு வழங்க கூடாது” சுற்றுலா பயணிகளை எச்சரித்த வனத்துறையினர்…!!

சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு பண்டங்களை வழங்கக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆசனூர், கேர்மாளம், சத்தியமங்கலம் ஆகிய வனபகுதிகள் மழை பெய்து வருவதால் பசுமையாக காட்சியளிக்கிறது. இதனால் ஆசனூர் பகுதியின் இயற்கை அழகை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் குரங்குகளுக்கு சுற்றுலாப்பயணிகள் பொரித்த உணவுப்பொருட்களை வழங்குகின்றனர். இதனை சாப்பிடும் குரங்குகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுகின்றன.

எனவே வனத்துறையினர் பொரித்த பண்டங்களை குரங்குகளுக்கு வழங்க கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குனர் சங்கர் கூறியுள்ளார். மேலும் அப்பகுதிகளில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *