“கும்பல்கர் கோட்டை” உலகத்தின் நீளமான 2-வது சுவர்…. எங்கிருக்கிறது தெரியுமா….?

உலகத்தில் உள்ள மிக நீளமான சுவர் சீனப்பெருஞ்சுவர் ஆகும். இந்நிலையில் உலகத்தின் 2-வது நீளமான பெரிய சுவர் இந்தியாவில் தான் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கும்பல்கர் கோட்டை தான் உலகத்தின் 2-வது நீளமான சுவர் ஆகும். இந்த கும்பல்கர் கோட்டை 15-ம் நூற்றாண்டில் ராணா கும்பா என்ற மன்னரால் கட்டப்பட்டது.

இந்தக் கோட்டை கடல் மட்டத்திலிருந்து 1100 அடி உயரத்தில் ஒரு மலையின் மீது இருக்கிறது. இந்த கோட்டையின் சுற்றுசுவர் கிட்டத்தட்ட 36 கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது. இந்த கோட்டையில் மொத்தம் 7 வாயில்களும், 300 இந்து கோவில்களும், 60 ஜெயின் மத கோவில்களும் இருக்கிறது. மேலும் இந்த கோட்டையின் மதில் சுவரின் மேல் ஏறி பார்த்தால் ஆரவல்லி மலைத் தொடர்கள் மற்றும் தார் பாலைவனம் தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *