கும்பம் ராசிக்கு…யோசித்து செயல்படுங்கள்.. புத்தி சாதுர்யம் இன்று கூடும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை செய்து தான் செய்யவேண்டும். பெண்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமையற்ற நிலைகளால் நிம்மதி குறையும் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். சுப காரிய முயற்சிகளில் தடைகள் கொஞ்சம் நிலவும். இன்று நிம்மதியும், சுகமும் கூடுமானவரை கிடைப்பதற்கு மனதை நீங்கள் அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டிய சூழல் இருக்கலாம்.

பணவரவு ஓரளவு திருப்திகரமாகவே இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புத்தி சாதுரியம் இன்று கூடும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பது மட்டும் தவிர்த்துவிடுங்கள். ஜாமீன் கையெழுத்து போடாமல் இருப்பது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரம் நிதானமாகத்தான் நடக்கும். இன்று மனம் கொஞ்சம் அலைபாய கூடும். காதலர்களுக்கு இன்று சிறிய வாக்குவாதங்கள் வந்து செல்லலாம். கூடுமானவரை வாக்குவாதங்கள் இல்லாமல் நகர்த்தி கொள்வது ரொம்ப நல்லது.

இன்று மாணவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் படங்களில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானதாகவே இருக்கும். கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு எப்பொழுதும் ஒரு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்