கும்பம் ராசிக்கு… மன அமைதி குறையும்.. வேலைப்பளு அதிகரிக்கும்..!!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று சிலரால் உங்களுக்கு மன அமைதி குறையும். தீர்க்கமான முடிவு எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பணம்  வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். வீட்டு விவகாரங்களை வெளியில் சொல்லாதிருப்பது  ரொம்ப நல்லது. இன்று உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் ஏற்படும். வேலை பளு சற்று அதிகரித்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை நீங்கள் பெற முடியும் என்றாலும், கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் மிகவும் அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும்.

மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். மாணவர்களும் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடையக்கூடும். தேர்வு முடியும் வரை கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள், அதுபோதும். இன்று கூடுமானவரை நிதானத்தையும் நீங்கள் கடைபிடியுங்கள். பயணம் செல்லும் பொழுது கொஞ்சம் பொருட்களின் மீது கவனமாக இருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சைநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் இருக்கலாம்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண் :2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்