கும்பம் ராசிக்கு.. புனித பயணங்கள் மேற்கொள்வீர்கள்… சந்தோசம் அதிகரிக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று நீண்ட நாட்களாக திட்டமிட்ட புனிதப் பயணங்கள் மற்றும் தெய்வீக காரியங்கள் நல்லபடியாகவே ஈடேறும். சுகம் மட்டும் சந்தோசங்கள் கைகூடும். மனைவியின் உதவியை பெற்று மகிழ்வீர்கள். இன்று எண்ணி அதை எப்படி பட்டாவது செயல்படுத்த வேண்டும் என்று செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதால் ஒரளவுக்கு அனுகூலமான பலனை இன்று நீங்கள் பெற முடியும். பொருளாதார நிலை சிறப்பாகவே அமையும் என்றாலும் தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. செய்த முயற்சிகள் அனைத்தும் தடைகள் கொஞ்சம் அவ்வப்போது வந்து செல்லும், பயம் வேண்டாம்.

ஓரளவு நல்லபடியாகவே நடக்கும். கொடுக்கல்-வாங்கலில் ஓரளவு சீரான முன்னேற்றம் இருக்கும். பழைய கடன்கள் அடைபடும். புதிய கடன்கள் தலைதூக்கும் , அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். கூடுமானவரை பணத்தை மட்டும் யாரிடமும் கடனாக வாங்க வேண்டாம். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நீண்ட தூர பயணம் மனமகிழ்ச்சி ஏற்படும். இன்று பெரியோர்கள் அதற்கேற்றார்போல் காரியங்களைச் செய்யுங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். இன்று மாணவச் செல்வங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். கல்வியில்  அவர்களுக்கு ஆர்வம் மிகுந்து காணப்படும். தேர்வில் நல்ல மதிப்பெண்களும்  வெற்றி பெறக் கூடிய சூழலும் இருக்கும்.

இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் உங்களது சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட திசை: தெற்கு