கும்பம் ராசிக்கு…அன்பும், மதிப்பும் குடும்பத்தில் கூடும்.. பாக்கிகள் வசூலாவதில் சிக்கல் இருக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். முக்கியமான பணி ஒன்று நிறைவேறும். குடும்பத்தினரின் அன்பும், மதிப்பும், மரியாதையும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கொஞ்சம் சிறு தடைகள் வந்து செல்லும்,  பார்த்துக்கொள்ளுங்கள். வருமானம் சுமாராகத்தான் இருக்கும். கொஞ்சம் அலைச்சல் இருக்கும், பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் சில சிக்கல்கள் இருக்கும், பார்த்துக் கொள்ளுங்கள். எதிர்பார்த்த விஷயங்கள் கிடைப்பதில் கொஞ்சம் காலதாமதம் ஏற்படும்.

மிகவும் கவனமாக தான் இன்று பணிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் சிரமம் இருக்கும். அதேபோல வெளிவட்டாரத்தில் நீங்கள் மற்றவர்களிடம் பழகும் பொழுது ரொம்ப கவனமாகவே இருக்க வேண்டும். யாருடனும் எந்த விதத்திலும் வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடாமல் இருங்கள். வாக்குறுதிகளையும் தயவுசெய்து கொடுக்காதீர்கள். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ளுங்கள், சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள், உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் இருப்பது ரொம்ப நல்லது.

அதிர்ஷ்ட திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *