தமிழ்நாட்டில் கன்னியாகுமரி ஒரு பிரபலமான சுற்றுலா தளமாகும். இங்கு விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாக இருக்கும். கன்னியாகுமரியில் புகழ்பெற்ற திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம், பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட ஏராளமான இடங்கள் இருக்கிறது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதாவது கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் வெள்ளி விழா கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் தமிழக அரசின் சார்பில் வெள்ளி விழா கொண்டாடப்பட இருக்கிறது. மேலும் இதனை முதல்வர் ஸ்டாலின் வீடியோ வாயிலாக அறிவித்துள்ளார்.
ஜனவரி 1, 2025: குமரிமுனையில் வானுயர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா! pic.twitter.com/McfFESptUv
— M.K.Stalin (@mkstalin) November 12, 2024