குப்பை வண்டியில் வந்த அரிசி மூட்டைகள்… அம்மா உணவகத்தில் இறக்கிய அதிர்ச்சி…!!!

திருச்சியில் அம்மா உணவகத்திற்கு குப்பை வண்டியில் அரிசி மூட்டைகளை கொண்டு வந்த சம்பவம் தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் வருகின்றது. திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் அம்மா உணவகத்திற்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் நகராட்சி வேன்களில் கொண்டு வந்து இறக்கப்படும்.

ஆனால் தற்போது குப்பை சேகரிக்கும் வண்டியில் அரிசி மூட்டைகள் கொண்டுவரப்பட்டு உணவகத்தில் இறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டியில் அரிசி மூட்டைகளைக் கொண்டு வந்து இறக்கிய சம்பவம் குறித்து அப்பகுதி இளைஞர்கள் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply