குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகை… பொதுமக்கள் கடும் அவதி…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அனைத்து தெருக்களிலும் உள்ள மக்கள்  குப்பைகள  தாலுகா அலுவலகம், மின்துறை அலுவலகத்திற்கு பின்புறத்தில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர் . இந்த குப்பைகளில் பிளாஸ்டிக் மற்றும் அனைத்து விதமான இறைச்சி கழிவுகளும் இருப்பதால் அவை அனைத்தும் ஒரே இடத்தில் கொட்டப்படுவதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இரவு நேரங்களில் இந்த குப்பைகளை சிலர் தீவைத்து எரிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் இரவில்  எரியும் தீ தொடர்ந்து பகல் நேரங்களிலும் புகைக்க தொடங்குவதனால் அந்த பகுதியாக நடைப்பயிற்சி செய்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகை ஹவுஸ் அம்பலம் தெரு, காதர் பிச்சை தெரு, கலிபா தெரு, மணியக்காரன் தெரு போன்ற அருகில் உள்ள தெருக்களுக்கும் பரவுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply