குத்தாட்டம் போடும் முகேன் ராவ்… பட்டைய கிளப்பும் ‘வேலன்’ பட முதல் பாடல்…!!!

முகேன் ராவ் கதாநாயகனாக நடித்துள்ள வேலன் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது .

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் முகேன் ராவ் . தற்போது இவர் கவின் இயக்கத்தில் உருவாகியுள்ள வேலன் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபு, சூரி, தம்பி ராமைய்யா, ஹரிஷ் பரேடி, பில்லி முரளி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

இன்று இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் வேலன் படத்தில் இடம்பெற்ற ‘டண்டனக்கா டண்டனக்கா தவுலடி’ என்கிற பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். இந்த பாடலை பிரபல தமிழ் பாடகர் வேல்முருகன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த கலக்கலான பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *