குட் நியூஸ்….. 3 நாட்கள் தொடர் விடுமுறை….. சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!

3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சனி ஞாயிறு மற்றும் திங்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து வெளியூருக்கு கூடுதலாக 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. இன்றும், நாளையும் கோயம்பேட்டில் இருந்து 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலும் விடுமுறை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப போதுமான பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.