“1/2 மணி நேரம் போராட்டம்”… உன் பெற்றோருக்கு என்ன பதில் சொல்வேன்…. கதறிய உறவினர்… பரிதாபமாக உயிரிழந்த சிறுமி..!!

அரியலூர் மாவட்டத்தில் குட்டையில் குளிக்க சென்ற சிறுமி நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில் சம்பந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிற்கு தஞ்சை மாவட்டத்திலிருந்து ராமமூர்த்தி என்பவரின் மகள் விஷாலி என்ற சிறுமி விருந்தினராக வந்துள்ளார். இந்நிலையில் விஷாலி அந்த பகுதியில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து அருகிலுள்ள பனங்குட்டைக்கு குளிக்க சென்றுள்ளார்கள். அப்போது  விஷாலி ஆழமான பகுதியில் குளித்து கொண்டிருக்கும் போது நீச்சல் தெரியாததால் விஷாலி தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சிறுமிகள் விஷாலியை காப்பாற்ற முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை.

இதனால் சிறுமிகள் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் வந்து குட்டையில் தேடியும் அரை மணி நேரத்திற்கு பின்பே விஷாலி  மீட்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து விஷாலியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு விஷாலியை பரிசோதித்த டாக்டர் விஷாலி ஏற்கனவே  இறந்துவிட்டதாக  தகவல் கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.