சேலம் மாநகராட்சியில் பழைய பேருந்து நிலையம், பெரியார் பேரங்காடி, போஸ் மைதான வணிக வளாகம்,வ உ சி மார்க்கெட் மற்றும் நேரு கலையரங்கம் ஆகியவை மறு சீரமைப்பு பணிகளும் புதிய பேருந்து நிலையம் அருகில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் மற்றும் தொங்கும் பூங்கா வளாகத்தில் வாகன நிறுத்துமிடம், ஆனந்தா பாலம் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் மற்றும் பள்ளப்பட்டு ஏறி புனரமைப்பு பணி உள்ளிட்டவற்றை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இதற்காக முதல்வர் ஸ்டாலின் மூன்று நாள் சுற்றுப்பயணம் ஆக நேற்று மாலை சேலம் சென்றடைந்தார்.

அப்போது நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒரு குட்டி கதையை கூறிய நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ஒரு ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு பொருள்களை எல்லாம் அடித்து வருகிறது. வெள்ளத்தில் கருப்பா ஒன்னு உருண்டு வருது. அதை ஒருவர் போட்டி போட்டு எடுக்கிறார். பிடித்த பின் தான் தெரிகிறது அது கரடியென, இப்போது அந்த நபர் கரடியை விட தயாராகி விட்டார். ஆனால் கரடி அந்த நபரை விட தயாராக இல்லை என்று கூறினார். அதாவது இபிஎஸ்ஐ பாஜகவிட்டாலும் பாஜக இபிஎஸ்ஐ விடாது என்று சாடினார்.