குடும்ப சண்டையை தடுக்க சென்ற…” காவலர்களுக்கு நேர்ந்த கொடுமை”… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் குடும்ப சண்டையை தடுக்க சென்ற காவலர்கள் தாக்கப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்த ரஃபிக் என்பவரின் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக வீட்டின் அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அனுப்பினார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு இரண்டு காவலர்கள் சென்று சமாதானம் செய்ய முயன்றனர்.

அப்போது காவலர்களை ரபீக்கின் குடும்பத்தினர் செங்கல் மற்றும் கற்களால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த காவலர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் கூறும் போது அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *