டெல்லி உச்சநீதிமன்றம் இறந்து போன அரசு ஊழியரின் கணவன் அல்லது மனைவி வேறொரு பிள்ளையை தத்து எடுத்துக் கொண்டால் அந்த பிள்ளைக்கு குடும்ப பென்ஷன் வழங்கப்பட மாட்டாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர் ஸ்ரீதர் சிமுர்கார். இவர் இறந்த பிறகு அவருடைய மனைவி ஸ்ரீராம் என்ற மகனை தத்தெடுத்துள்ளார்.
இவர் குடும்ப பென்ஷன் வேண்டும் என மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது அந்த வழக்கை நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அரசு ஊழியர்களை சார்ந்திருப்பவர்களை குடும்பம் என்று சொல்ல முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் இந்து சட்டத்தின்படி ஸ்ரீராமை ஸ்ரீதரின் குடும்பம் என்று கருத முடியாது என்று கூறிய நீதிபதிகள் அவருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டனர்.