தமிழகத்தை போல புதுச்சேரி மாநிலத்திலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடம் தோறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பச்சரிசி, வெள்ளம், உளுந்து, கடலைப்பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட இந்த 10 பொருட்கள் இருக்கக்கூடிய 500 மதிப்பிலான இந்த தொகுப்பை வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

பொங்கல் பரிசு பொருட்களை அங்கன்வாடியில் கொடுப்பதற்கு பதிலாக பயனாளிகளுடைய வங்கி கணக்கில் ரூபாய் 470 வழங்க புதுச்சேரி அரசு முடிவு எடுத்து அதற்கான கோப்பை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கான ஒப்புதல் வந்தவுடன் விரைவில் பயனாளிகளின் வங்கி கணக்கில் இந்த தொகை செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.