“குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000″…. ஜனவரியில் அறிவிப்பு….? வெளியான முக்கிய தகவல்….!!!!

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்குவதற்கான அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. குறிப்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக நான்காயிரம், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு நிவாரணம் நான்காயிரம் ரூபாய், ஆவின்பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து உள்ளிட்ட 5 திட்டங்களை தொடங்கி வைத்தார். ஆனால் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 உரிமை தொகை திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

இந்த திட்டம் முதல்வர் ஸ்டாலின் முதல்நாளே கையெழுத்து போட்டு தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அந்த அறிவிப்பு வெளியாகவில்லை. கலைஞரின் பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி இந்த திட்டம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது, அப்போதும் தொடங்கவில்லை.  குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு எப்போது தொடங்கும் என்று தொடர்ந்து எதிர்பார்த்து வருகின்றனர். அமைச்சர்கள் விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்குவதற்கான அறிவிப்பு வருகிற ஜனவரி மாதம் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏனெனில் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் தேதி ஆளுநர் உரையுடன் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் அனேகமாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமை தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வந்துவிட்டால் திட்டங்களை அறிவிக்க முடியாது. எனவே இந்த கூட்டத்தொடரில் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.