குடும்பத்தோட பாதுகாப்பு முக்கியம்…. கேஜிஎப் நடிகர் எடுத்த முடிவு…!!

நடிகர் யாஷ் தனக்கும் தன்னுடன் நடிப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளார் .

கொரோனா தொற்றினால் ஆறுமாதத்திற்கு மேலாக படப்பிடிப்பு தடை செய்யப்பட்டிருந்தது.  தற்போது பல கட்டுப்பாடுகளுக்கு பிறகு  படபிடிப்புக்கு  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் படபிடிப்பில் கலந்து கொள்ளும்  அனைவருக்கும் covid-19 பரிசோதனை மற்றும் முக கவசம், 100 பேருக்கு அதிகமாக இருக்கக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து இந்த கட்டுப்பாட்டுடன் கே ஜி எப் 2 படத்தினுடைய படபிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

இதில் சண்டைப்பயிற்சி கலைஞருடன் சண்டையிடுவது ,சேற்றில் விழுவது, செயற்கை ரத்தத்தை உடல் முழுவதும் பூசிக் கொள்வது போன்ற காட்சிகள் இப்படத்தில் அமைக்கப்பட்டிருப்பதால், படப்பிடிப்பு முடிந்ததும் தன்னுடைய வீட்டுக்கு திரும்பாமல் நடிகர் யாஷ் நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருக்கிறார். அங்கு அவருக்கு Covid-19 பரிசோதனை செய்து தனக்கு  தொற்று  இல்லை என உறுதியானதும்,தன்னுடைய  மனைவி மற்றும் குழந்தைகளை தன்னை வந்து சந்திக்க அனுமதி அளித்துள்ளார். அதுமட்டுமன்றி,  கே ஜி எப் 2 படத்தில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் கட்டாய பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்துள்ளார் யாஷ் . தன்னுடைய குடும்பத்தை போலவே மற்ற நடிகர்களின் குடும்பமும் கொரோனாவால்  பாதிக்கப்பட கூடாது என்பதாலே இந்த ஏற்பாடு செய்துள்ளார் என படக்குழுவினர் கூறுகின்றனர்.