குடியிருப்பில் தீ விபத்து…. உடுத்திய உடைகள் தான் மிச்சம்…. கண்ணீருடன் குடும்பம்….!!

குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் உடைமைகளை இழந்து மக்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

சுவிட்சர்லாந்தில் உள்ள துர்காவ் என்ற மண்டலத்தில் Gaunter Saucen பகுதியில் பட்டறையுடன் கூடிய ஒரு குடியிருப்பு இருந்துள்ளது. இக்குடியிருப்பு கடந்த திங்கட்கிழமை அன்று பகலில் தீ பற்றி எரிந்தது இதனால் அந்தப் பட்டறையும் குடியிருப்பும் மொத்தமாக கருகி சாம்பல் ஆனது. இதில் பல நூறு ஆயிரம் பிராங்குகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காரணத்தை தெரிந்துகொள்ள காவல் மற்றும்  தீயணைப்பு துறையினர், மண்டல தடவியல் துறையினர் சேர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதில் அங்கிருந்த கிராம மக்கள், விபத்து உண்டான பகுதியிலிருந்து ஏற்பட்ட தீ சுமார் மூன்று கிலோமீட்டர் வரை பரவியதாக கூறியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறுகையில், தங்களின் உடைமைகளை மீட்க முடியாமல் போய்விட்டது மேலும்  தாங்கள் உடுத்தியிருந்த உடை மற்றும் வெளியில் இருந்த வாகனம் மட்டுமே மீதம் இருப்பதாகவும் இதனால்  பண்டிகை காலங்களில் அனைத்தையும் இழந்துவிட்டு தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுவிட்டது என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.