குடியரசு தின விழா தேநீர் விருந்து…! போனில் அழைப்பு விடுத்த ஆளுநர் ரவி…. கலந்து கொள்வாரா CM ஸ்டாலின்…!!

குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற இருக்கிறது. இந்த தேநீர் விருந்தை விசிக கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் புறக்கணித்ததோடு ஆளுநரை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இதேபோன்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்து கொள்வதற்கு எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் சார்பாக அழைப்பிதழ் விடுக்கப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதேபோன்று ஆளுநரின் செயலாளர் முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் வந்து அழைப்பிதழும் கொடுத்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் தேநீர் விருந்தில் கலந்து கொள்வாரா இல்லையா என்பது விரைவில் தெரியவரும். மேலும் தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு பதில் தமிழகம் என்ற வார்த்தையே சரியாக இருக்கும் என்று ஆளுநர் கூறியது சட்டசபையில் அரசு தயாரித்து கொடுத்த உரையில் சில வார்த்தைகளை தானாக சேர்ந்தும் நீக்கியும் ஆளுநர் பேசியது போன்ற பல்வேறு சர்ச்சைகள் இருப்பதால் ஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் நிலவுகிறது.