குடிபோதையில் இருந்த மகன்…. தந்தைக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு…!!

குடிபோதையில் மகன் தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேடு பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெயிண்டரான ரவிராஜ் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த தனது மகனை துரைராஜ் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ரவிராஜ் தனது தந்தையின் மீது அமர்ந்து அவரது தலையை தரையில்  ஓங்கி அடித்துள்ளார். இதனால் துரை ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதனை அடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த துரைராஜின் மனைவி தனது கணவர் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துரைராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *