குடிபோதையில் இப்படியா பண்ணனும்..! வாலிபர் எடுத்த விபரீத முடிவு… மயிலாடுதுறையில் சோகம்..!!

மயிலாடுதுறையில் மதுபோதையில் வாலிபர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வேட்டங்குடி கிராமம் மெயின் ரோட்டில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேரரசன் (28) என்ற மகன் இருந்தார். இவர் திருமணம் ஆகாதவர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இவர் மது குடித்துவிட்டு தினமும் போதையிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் மது போதையில் இருந்துள்ளார். அப்போது வயலுக்கு தெளிப்பதற்காக வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்

இதையடுத்து அவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து புதுப்பட்டினம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *